வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

ரஜினியின் அரசியல் தாமதம் நல்லதுக்கா..!? ஜெ.,அண்ணன் மகன் தீபக் சூசக தகவல்

 

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல், காலியான எம்.எல்.ஏ., தொகுதிகளில் இடைத்தேர்தல் என தமிழகம் மிக பரபரப்பாக காணப்படுகிறது.

கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தமிழக அரசியலில் எதிர் எதிர் அணியின் தலைவர்களாக இருந்த செல்வி.ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி இருவரும் இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் முடிவு எல்லாராலும் கவனிக்க படும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில்
முன்னால் முதல்வர்
ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் தீபக்’கிடம், தமிழகத்தில் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற மற்றும் இடை தேர்தல் பற்றி கருத்து கேட்டோம்.

அதற்கு அவர் கூறிய பதில்: “ரஜினிகாந்த் கட்சி இந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தால், இந்த தேர்தலே வேறு மாதிரி இருந்திருக்கும். ரஜினிகாந்த் போட்டியிடாத தேர்தலை தான் இங்கு மக்களும் சரி, அரசியல்வாதிகளும் சரி பார்த்து கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று சொல்லுகிறார்கள். அதனால் என்ன, இருக்கட்டுமே அவர் வெய்ட் பண்ணி வரட்டும், இப்போ அதனால என்ன இருக்கு.

இப்போது இருக்கும் இவர்கள் எல்லாம் சண்டை போட்டு வந்து போகட்டும்.

என்னுடைய அத்தை ஜெயலலிதா அவர்களும் கலைஞரும் இல்லாததினால், அவரவர் இஷ்டப்படி பேசி வருகிறார்கள்.

தமிழக அரசியலில் அவர்கள் இருவர் இருந்த போது இருந்த அரசியல் பரபரப்பு இப்போது இல்லை.” இவ்வாறு தீபக் கூறினார்.

அரசியல் பக்கம் வராமல் இருந்தாலும் தமிழக அரசியல் இந்திய அரசியல் விளையாட்டு என பலவிஷயங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார் தீபக்.

346 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன