புதன்கிழமை, மே 15
Shadow

தேவராட்டம் என்னை காப்பாற்றும் – கவுதம் கார்த்திக் நம்பிக்கை

ஞானவேல் ராஜா தயாரிப்பில் மே 1ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள தேவராட்டம் பட பத்திரிகையாளர் சந்திப்பு .ந்டந்தது.

கவுதம் கார்த்தி பேசும்போது,

“இந்தப்படம் என்னை காப்பாற்றும் என்று நம்புகிறேன். எனக்கு இந்தப்படம் வந்ததிற்கு காரணம் ஞானவேல்ராஜா சார் தான். முத்தையா சார் தான் மதுரை மக்களின் பாஷையையும் வாழ்க்கை முறைகளையும் சொல்லித் தந்தார். சத்தியமாக மதுரை மக்களின் பாசம் போல யாரும் வைக்க முடியாது. பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது. என் அப்பாவிற்கு பசப்புக்கள்ளி பாடல் மிகவும் பிடித்திருக்கிறது.

மஞ்சுமா மோகன் நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார். சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்து விடுவார். ஒளிப்பதிவாளர் என்னையை மிக அழகாக காட்டி இருக்கிறார். மதுரை மிக மிக அழகாக காட்டி இருக்கிறார். நான் முத்தையா சாருடன் நிறைய படங்கள் பண்ணவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனென்றால் அவர் எனக்கு நிறைய சொல்லித் தந்திருக்கிறார்” என்றார்.
நடிகை மஞ்சுமா மோகன் பேசும்போது,

“தேவராட்டம் எனக்கு முக்கியமான படம். முத்தையா சார் முதலில் ஒரு படத்திற்காக கேட்டார். அப்போது டேட் இல்லாததால் நடிக்க முடியவில்லை. அப்போது அவர் மீண்டும் நான் உங்களை தேடி வருவேன் என்றார். சொன்னது போலவே இந்தப்படத்திற்கு என்னை நடிக்க அழைத்தார். கவுதம் நல்ல எனர்ஜியான நடிகர். படத்தில்  என்னோடு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஞானவேல்ராஜா சாருக்கும் நன்றி” என்றார்.

இசை அமைப்பாளர் நிவாஸ்.கே பிரசன்னா பேசும்போது,

“இந்தப்படத்தில் நல்ல பாடல்கள் அமைய முக்கியக் காரணம் முத்தையா சார் தான். அவருக்கு நன்றி. என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சாருக்கும் நன்றி. முத்தையா சாரிடம் கதைசொல்லலில் ஒரு நேர்த்தி இருக்கிறது. இந்தப்படத்தை ஆர்.ஆரில் பார்த்து தான் சொல்கிறேன். இந்தப்படத்திற்கு பின் கவுதம் கார்த்தி மாஸ் ஹீரோவாக வருவார். மஞ்சுமா மோகம் திரையில் அழகாக இருக்கிறார். படம் பெரிய வெற்றி அடையும் என்று நம்புகிறேன்” என்றார்.

 
எழுத்தாளரும் நடிகரும் ஆன வேல.ராமமூர்த்தி பேசும்போது,

“எனக்கு நல்ல அடையாளத்தை கொம்பன் படம் மூலமாக ஏற்படுத்தித் தந்த தம்பி முத்தையாவிற்கு நன்றி. அவர் தொடர்ந்து தன் படங்களில் குடும்ப உறவுகளைப் பற்றிப் பதிவு செய்து வருகிறார். இந்த தேவராட்டம் படம் அக்கா தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்டது. அக்காவின் பாசம் அம்மாவின் பாசத்திற்கு ஈடானது. இந்தப்படம் இரு பெருங்குடும்பத்தின் கதை இது. அந்தப் பெருங்குடும்பத்தின் ஆணிவேராக என் கேரக்டர் இருக்கிறது. என்னுடைய கதைகளுக்கு தமிழில் ஒரு ஹீரோ இல்லையே என்ற ஏக்கம் இருந்தது. அதைத் தீர்க்க வந்தவர் கவுதம் கார்த்தி. அவர் நடிப்பில் எல்லாத் தளங்களிலும் கலக்கி வருகிறார். இந்தப்படம் சாதி படம் அல்ல. ஆட்டக்கலைகளை பற்றிய தகவல்களை திரட்டிய போது தேவராட்டம் என்ற ஆட்டத்தைப் பற்றி அறிந்தேன். தேவராட்டம் என்றால் தேவர்கள் ஆடும் ஆட்டமல்ல. இது எல்லாச் சாதிகளும் ஆடும் ஆட்டம்” என்றார்.

483 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன