சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

தர்பார் தேதியால் தாமதமான தர்மபிரபு சுதாரித்த யோகிபாபு..!

தர்பார் தேதியால் தாமதமான தர்மபிரபு சுதாரித்த யோகிபாபு..!

தமிழ் சினிமாவில் இன்றைக்கு யார் தேதி கிடைக்கிறதோ இல்லையோ இவர் தேதி கிடைக்கவே கிடைக்காது… அதேபோல எந்த பட பூஜை போட்டாலும் இவர் அந்த படத்தில் கெஸ்ட் ரோலிலாவது இடம் பிடிப்பார்… அப்படி கெஸ்ட் ரோலில் நடித்தாலும் டைரக்டர்கள் ஒரு பாடல் காட்சியை வைத்து விடுவார்கள்… அந்தளவுக்கு பிசியான நடிகராக மாறியிருப்பவர் யோகிபாபுதான்.
விஜய், அஜீத், சூர்யா என பலரோடு நடித்தவர் இப்போது ரஜினி படத்திலும் நடித்து வருகிறார். ரஜினியின் இப்போதைய ‘தர்பார்’ படத்தின் படபிடிப்பு மும்பையில் நடக்கிறது. சுமார் 50 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில் ரஜினியுடனேயே யோகிபாபுவுக்கும் காட்சிகள் இருப்பதால் அவரும் அதிக நாட்கள் தேதி கொடுத்திருக்கிறார் இதன் காரணமாக யோகிபாபு நடித்து முடித்து ரிலீசுக்கு ரெடியாகி வரும் தர்மபிரபு, ஏ1 படங்களின் டப்பிங் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
தர்மபிரபு, ஏ1 படங்களின் டப்பிங் பணிகள் அனைத்தும் சென்னையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் முக்கிய நடிகராக இருக்கிற யோகிபாபு மும்பையில் படப்பிடிப்பில் இருப்பதால் சென்னை வந்து டப்பிங் பேச முடியாத சூழல் ஏற்பட்டது.


இதையடுத்து, ரஜினியின் தர்பார் படப்பிடிப்பும் தடைபடக்கூடாது, தர்மபிரபு, ஏ1 படங்களின் டப்பிங் பணிகளும் தடைபடக்கூடாது என்பதற்காக முதலில் தர்மபிரபு படத்தில் தான் பேச வேண்டிய காட்சிகளுக்கான டப்பிங்கை மும்பையில் பேசி தர யோகிபாபு முடிவு செய்தார்.
இதையடுத்து பகலில் தர்பார் ஷூட்டிங் இரவில் தர்மபிரபு டப்பிங் என பரபரப்பாக வேலை செய்து தர்மபிரபு படத்தின் டப்பிங் பணியை முடித்து கொடுத்திருக்கிறார் யோகிபாபு.
இந்த விவரம் ரஜினிக்கு தெரிந்ததும் யோகிபாபுவை அழைத்து ‘உங்கள் உழைப்பு கண்டிப்பாக உங்களை நல்ல இடத்திற்கு அழைத்து செல்லும்’ என்று வாழ்த்தியிருக்கிறார். ரஜினியின் வாழ்த்தால் யோகிபாபு ரொம்பவே உற்சாகமடைந்திருக்கிறார்.

461 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன