
விஷால் நடித்து மது தயாரித்த படம் அயோக்யா. இந்த படம் கன்னடத்தில் ஹிட் அடித்த டெம்பர் படத்தின் ரீமேக் என்றார்கள். இந்த நிலையில் படம் கடந்த மாதம் 19ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி மாற்றப்பட்டது.
அதன் பின் மே 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென படத்தின் தயாரிப்பாளர் மதுவே பட ரிலீசுக்கு முட்டுக்கட்டை போட்டார்.
பட தயாரிப்பு செலவு திட்டமிட்டதை விட அதிகம் ஆனதற்கு விஷால் தான் காரணம் அதிகரித்த பட்ஜெட் தொகையை கொடுத்தால் தான் படம் ரிலீஸ் ஆகும் என கூற ரிலீஸ் மீண்டும் சிக்கல் ஆனது.
ரிலீசுக்கு முதல் நாள் மாலை தொடங்கி நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாமல் போனதால் 10ம் தேதி படம் ரிலீஸ் ஆகாமல் போனது.
தயாரிப்பாளர் சங்கத்தலைவர் படத்துக்கே இந்த நிலை என கோலிவுட்டில் கடும் விவாதங்கள் நடந்த நிலையில் மீண்டும் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்திய பின் இன்று (11.5.19) படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
இதே போல அதர்வா நடிப்பில் காவ்யா தயாரித்த படம் 100 இந்த படமும் பைனான்ஸ் சிக்கலில் மாட்டியதால் 9ம் தேதி ரிலீஸ் ஆக இருந்த நிலையில் ரிலீஸ் தள்ளிப்போனது.
இந்த படத்தையும் ரிலீஸ் செய்ய பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின் 100 படமும் இன்று (11.5.19) உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது.
இபல படங்களை தயாரித்த ஆரா சினிமாஸ் மகேஷ் முதல் முறையாக 100 படத்தில் வில்லன் ஆக களம் இறங்கினார். அறிமுக நடிகர் என்று கண்டுபிடிக்க முடியாத படி முதல் படத்திலேயே ஸ்கோர் வாங்கியிருந்தார்.
இந்த படங்களை விட அதிக சிக்கலில் இருந்த ஜீவாவின் கீ படம் பிரபல அரசியல் தலைவர் டி.டி.வி.தினகரன் தலையிட்டு உதவி செய்ததால் சிக்கலின்றி ரிலீஸ் ஆனது.
