வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

Tag: அதர்வா

அதர்வா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அதர்வா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடித்துள்ள திரைப்படம் 'டிரிக்கர்'. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அருண் பாண்டியன், சீதா, முனீஸ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரமோத் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆக்‌சன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள 'டிரிக்கர்' படத்திற்கு இயக்குனர் பிஎஸ் மித்ரன் வசனம் எழுதியுள்ளார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'டிரிக்கர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'டிரிக்கர்' திரைப்படம் செப்டம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. https://twitter.com/Atharvaamurali/status/1567830339208486913?ref_src=twsrc...
படப்பிடிப்பை நிறைவு செய்த அதர்வா!

படப்பிடிப்பை நிறைவு செய்த அதர்வா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கி இருக்கும் திரைப்படத்திற்கு 'நிறங்கள் மூன்று' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்கிறார். சுஜித் சாரங்கின் உதவியாளர் டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த ஜனவரி 2-ந்தேதி இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குனர் கார்த்திக் நரேன் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படத்தின் பு...
ரஜினி வெளியிட்ட தோனியின் சூப்பர் ஹீரோ புத்தகம்!

ரஜினி வெளியிட்ட தோனியின் சூப்பர் ஹீரோ புத்தகம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
இந்திய அணியின் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி, இந்திய அணிக்கு டி20, ஒருநாள் உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளை வென்று தந்துள்ளார். இது தவிர ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்கு தலைமை தாங்கும் தோனி, 4 முறை தொடரை வென்று தந்துள்ளார். இதனால் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். எம்.எஸ். தோனி ‘அதர்வா: தி ஒரிஜின்’ என்ற கிராஃபிக் நாவலில் கதாநாயகனாகவும் அறிமுகமாகவுள்ளார். விர்ஸு ஸ்டூடியோஸ் மற்றும் மிடாஸ் டீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து, ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதும் ‘அதர்வா: தி ஒரிஜின்’என்ற கிராபிக்ஸ் நாவலில் வரும் சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்துக்கு எம்.எஸ்.தோனியின் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராஃபிக் நாவலுக்கான மோஷன் போஸ்டரை சமீபத்தில் தோனி அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டிருந்தார். வரலாற்றுக் கதையை பின்னணியாக கொண்ட இந்த நாவலுக்காக 150 ஓவியங்க...
மோகன்லாலுக்கு போட்டியாக களமிறங்கும் அதர்வா!

மோகன்லாலுக்கு போட்டியாக களமிறங்கும் அதர்வா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மோகன்லாலுக்கு போட்டியாக களமிறங்கும் அதர்வா! 16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் தயாராகி உள்ளது. ரூ.100 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். இதில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். நடிகைகள் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ள இப்படம் வருகிற டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அப...
‘குருதி ஆட்டம்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது!

‘குருதி ஆட்டம்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
‘குருதி ஆட்டம்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது! ‘எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர், ஸ்ரீகணேஷ். இவர் அடுத்ததாக இயக்கி இருக்கும் புதிய படம், ‘குருதி ஆட்டம்’. அதர்வா முரளி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி குருதி ஆட்டம் படத்தில் இடம்பெறும் ‘ரங்க ராட்டினம்’ எனும் பாடலை வருகிற ஜூலை 1-ந் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது....
புரட்சி வாலிபனாக களமிறங்கும் அதர்வா!

புரட்சி வாலிபனாக களமிறங்கும் அதர்வா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
புரட்சி வாலிபனாக களமிறங்கும் அதர்வா! “குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன்” படங்களை இயக்கிய ராஜமோகன் அடுத்தாக அட்ரஸ் என்னும் படத்தை இயக்கி இருக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் அதர்வா, புரட்சி வாலிபராக நடித்திருக்கிறார். காளி என்ற கதாபாத்திரத்தில் வரும் அதர்வா, நட்புக்காக சிறிய வேடத்தில் நடித்து கொடுத்திருக்கிறார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பூஜா ஜாவேரி நடிக்கிறார். மேலும், இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பிராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலி சோடா முத்து மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ...
மரகத நாணயம் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது!

மரகத நாணயம் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மரகத நாணயம் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது! தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. அறிமுக இயக்குனர் சரவன் இயக்கி இருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பின் எந்த படத்தையும் இயக்காமல் இருந்த இயக்குனர் சரவன், அடுத்ததாக அதர்வா நடிக்கும் படத்தை இயக்க உள்ளாராம். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், அதர்வா படத்துக்கு பின் மரகத நாணயம் படத்தின் 2-ம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக இயக்குனர் சரவன் தெரிவித்துள்ளார். மரகத நாணயம் 2 படத்திற்கான கதைக்கருவை தயாரிப்பாளர் டில்லி பாபுவிடம் கூறியுள்ளதாகவும், அதற்கான கதையில் பணிபுரிந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம்  'மரகத நாணயம் 2' விரைவில் உருவாகும் எனத் தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என ...
ஜிகர்தண்டா ரீமேக் மூலம் தெலுங்கில் கால் பதிக்கும் அதர்வா..!

ஜிகர்தண்டா ரீமேக் மூலம் தெலுங்கில் கால் பதிக்கும் அதர்வா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜிகர்தண்டா ரீமேக் மூலம் தெலுங்கில் கால் பதிக்கும் அதர்வா..! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தமிழில் சூப்பர்ஹிட் ஆனபடம் ஜிகர்தண்டா. இந்த படத்தினை தெலுங்கில் வால்மீகி என்கிற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். தமிழ் ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா மற்றும் சித்தார்த் ஆகியோர் நடித்திருந்தனர். தெலுங்கு வால்மீகி படத்தில் சித்தார்த் நடித்த ரோலுக்கு நடிகர் அதர்வா நடிக்கிறார். இதன் மூலம் அதர்வா தெலுங்கு சினிமாவில் நுழைகிறார். பாபி சிம்ஹா ரோலுக்கு வருண் தேஜ் நடிக்க்கிறார். லட்சுமி மேனன் நடித்த ஹீரோயின் ரோலுக்கு பூஜா ஹேக்டேவை தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குனர் ஹரிஷ் ஷங்கர். ...
அதிகரிக்கும் தியேட்டர்கள் உற்சாகத்தில் 100 படக்குழு..!

அதிகரிக்கும் தியேட்டர்கள் உற்சாகத்தில் 100 படக்குழு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய சாத்தியங்கள் உண்டு. இது மாதிரியான நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் அதர்வா முரளி - ஹன்சிகா மோத்வானி நடித்த "100" பாக்ஸ் ஆபிஸில் நம்பமுடியாத ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்துக்கு, தற்போது திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரித்துள்ளன. இந்த வெற்றியால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஆரா சினிமாஸ் காவியா வேணுகோபால் கூறும்போது, "எங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியம்! எல்லா இடங்களிலும் இருந்து பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பை கண்டு நாங்கள் முழுமையாக பிரமித்து கொண்டிருக்கிறோம். விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என இரு தரப்பிலும் இருந்து தொலைபேசியில் அழைத்து...
அப்பாடா… விஷாலின் அயோக்யா, அதர்வாவின் 100 படங்கள் ஒருவழியாக இன்று ரிலீஸ்..!

அப்பாடா… விஷாலின் அயோக்யா, அதர்வாவின் 100 படங்கள் ஒருவழியாக இன்று ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஷால் நடித்து மது தயாரித்த படம் அயோக்யா. இந்த படம் கன்னடத்தில் ஹிட் அடித்த டெம்பர் படத்தின் ரீமேக் என்றார்கள். இந்த நிலையில் படம் கடந்த மாதம் 19ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி மாற்றப்பட்டது. அதன் பின் மே 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென படத்தின் தயாரிப்பாளர் மதுவே பட ரிலீசுக்கு முட்டுக்கட்டை போட்டார். பட தயாரிப்பு செலவு திட்டமிட்டதை விட அதிகம் ஆனதற்கு விஷால் தான் காரணம் அதிகரித்த பட்ஜெட் தொகையை கொடுத்தால் தான் படம் ரிலீஸ் ஆகும் என கூற ரிலீஸ் மீண்டும் சிக்கல் ஆனது. ரிலீசுக்கு முதல் நாள் மாலை தொடங்கி நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாமல் போனதால் 10ம் தேதி படம் ரிலீஸ் ஆகாமல் போனது. தயாரிப்பாளர் சங்கத்தலைவர் படத்துக்கே இந்த நிலை என கோலிவுட்டில் கடும் விவாதங்கள் நடந்த நிலையில் மீண்டும் பல சுற்று பேச்சுவார்த்தை...