
நடிகர் கமல்ஹாசன் முழு நேர அரசியலில் இறங்கினாலும் அவரின் திரைப்பசி அடங்காது. ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படம் தான் என் சினிமா வாழ்க்கையில் கடைசி படம் என கமல் அறிவித்தாலும் இந்தியன் 2 முடிவதற்கான எந்த அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் தெரியவில்லை.
அதே நேரம் கமலின் அரசியலில் அடுத்த மூவ் சட்டமன்ற தேர்தல் என்றால் அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் பிக்பாஸ் சீசன் 3 முடித்து அதில் கிடைக்கும் தொகையில் இன்னும் சில படங்களை தயாரிக்க திட்டம் இருந்தாலும் தனது நீண்ட நாள் ஆசையான தேவர்மகன் படத்தின் 2ம் பாகம் எடுக்க வேண்டிய நேரம் இது தான் என கமல் முடிவு செய்திருக்கிறார்.

இதற்கான கதையை ஏற்கனவே தயாரித்து வைத்திருந்ததால் இப்போது கதாபாத்திரங்கள் தேடும் பணியில் இறங்கி இருக்கிறார் கமல்.
அதன் முதற்கட்டமாக இசையை இசைஞானி இளையராஜாவிடம் ஒப்படைத்து இருக்கிறார். இதற்கு சம்மதம் வாங்க இளையராஜாவை கமல் சந்தித்து பேசியிருக்கிறார்.
தேவர் மகன் ஜாதி படமாக இருந்தாலும் கமல் அதில் ஜாதி வித்தியாசம் பார்க்காத கேரக்டரில் நடித்திருப்பார். இப்போது அந்த கேரக்ட்டரை தனது அரசியல் பயணத்திற்கு பயன் படுத்தி கொள்ள கமல் முடிவு செய்திருக்கிறார்.
