செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

ஹீரோயினுக்கு பிறந்த நாள் கேக் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்..!

 

விஜய் -அட்லி கூட்டணியில் உருவாகி வரும் படப்பிடிப்பில் கூட நடித்து வரும் நடிகையின் பிறந்த நாளுக்கு ஸ்பெஷல் கேக் வரவழைத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி குஷி படுத்தி இருக்கிறார் விஜய்.

பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய்யும், அந்த அணியின் தலைவியாக இந்துஜா நடிக்கிறார். ரெபா மோனிகா ஜான், வாஷா பொல்லம்மா உள்ளிட்ட மற்ற நடிகைகள் நடித்துள்ளனர். அதில் மோனிகா ஜான் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளான பெண்ணாக நடித்துள்ளார். மேலும் இதில் ‘படைவீரன்’, தெறி, காளி ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை அம்ரிதா ஐயரும் நடிக்கிறார்.

கடந்த செவ்வாய்க் கிழமை அம்ரிதாவுக்கு பிறந்த நாள் என்பதை அறிந்த விஜய், அவருக்கு இன்ப அதிர்ச்சி அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கேக் ஒன்றை ஆர்டர் செய்திருந்தார். ஷூட்டிங் முடிந்ததும் படப்பிடிப்புத் தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடினார் அம்ரிதா.
தளபதி விஜய்யின் இந்த ஸ்பெஷல் கிப்ட் அம்ரிதாவை இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காட வைத்து விட்டதாம்

509 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன