வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

பொந்துக்குள் முடங்கிய என் படங்களை மான்ஸ்டர் எலி வெளியே கொண்டு வரும் – எஸ்.ஜே.சூர்யா நம்பிக்கை

 

மான்ஸ்டர் பட வெற்றியில் மகிழ்ச்சியை நடிகர் எஸ்.ஜே.சூர்யா பத்திரிகையாளர்களோடு பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியது:

வாலியில் இயக்குனராக ஆரம்பித்து இன்று மான்ஸ்டர் வரை என் பயணம் வந்துள்ளது.

நல்லதை எப்போதும் பாராட்ட நீங்கள் மறந்ததில்லை இப்படத்திற்காக மட்டுமல்ல ஒட்டு மொத்த என் பயணத்திற்காகவும் பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு நன்றி.

என்னுடைய கனவுகளும் ஆசைகளும் அதிகம் ஒரு நடிகனாக சாதிக்க வேண்டும் என எண்னி 25வருடங்கள் ஓடிவிட்டன ,

பாலை வனத்தில் ஒட்டகம் போல ,ஓடிக்கொண்டிருக்கும் என் திரைப் பயணத்தில் முதல்முறையாக குடும்பங்களை இணைத்துள்ளது, மான்ஸ்டர் .

ஒரு புதிய பயணத்தின் தொடக்கம் என் படத்திற்கு முதல்முறையாக இவ்வளவு குடும்பங்கள் வந்துள்ளது இதை தவறவிட்டு விட்டேன் இவ்வளவு நாள் , இந்தி தெலுங்கு என ஒரு கலக்கு கலக்கவேண்டும்..

பிள்ளையாரின் வாகனமாக எலியின் மூலமாக நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது..

ஒரு பொறுப்பு எனக்கு இப்போது உள்ளது.
திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு குத்து பாடல் இல்லை கிளாமர் இல்லை ஆனால் கூட்டம் வருகிறது,

விலங்குகளை வைத்து படம் பண்ண முயற்சி செய்தேன். பொருட்செலவு அதிகம் எனவே இயலவில்லை,
திறமை வாய்ந்த இயக்குனரிடம் நம்மை ஒப்படைத்துவிட்டால் போதும்.

இதற்கு மேல் தொடர்ந்து நடிகனாக உழைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என நினைக்கிறேன்.

நான் விருப்படும் நடிப்பு மூலம் எனக்கு மதிப்பும் மரியாதை கிடைக்கும் என நம்புகிறேன்.

நல்ல கதை வரவில்லை என்றால் என்னிடம் கதை உள்ளது அதை எடுப்பேன்.

அமிதாப் பச்சன் உடன் நடித்த அனுபவம் என்பது.. அனைத்து காட்சிகளிலுமே முதல் டேக் ஓகே பண்ணிவிடுவார் அமிதாப்.

நிறையபடங்கள் பொந்துக்குள் சிக்கி உள்ளது. மான்ஸ்டர் எலி ஒவ்வொன்றாக வெளியே கொண்டு வந்து விடும் என நினைத்தேன் அது நடைபெறும்

அடுத்ததாக செல்வராகவன் இயக்கிய படம் . மிக அருமையாக இயக்கி இருக்கிறார். காதல்கொண்டேன் படத்தை இந்த கால கட்டத்திற்கு ஏற்றார் போல மிக யதார்த்தமாக படமாக்கி இருக்கிறார்.

அமிதாப் மிக சீனியர் நடிகராக இருந்தாலும் தொழிலில் மிக அர்ப்பணிப்போடு இருக்கிறார். எந்த காட்சியையும் ஒரே டேக்கில் ஓகே செய்கிறார். முதல் படத்தில் நடிப்பது போல மிக கவனமாக நடந்து கொள்கிறார். இதுதான் அவர் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.

ஒரு படம் தயாரித்தால் எல்லா ஆணவத்தையும் கோவத்தையும் கட்டுப்படுத்தி நிறைய கற்றுக் கொடுக்கும்.

அஜித்,விஜய் இருவரில் யார் அரசியலுக்கு வருவார்கள் என்பதை
அவர்கள் முடிவெடுத்து செய்வார்கள். ஒரு செயலை செய்தால் வெற்றி பெறக்கூடியவர்கள்
அவர்களை பற்றி தனிப்பட்ட முறையில் தெரிந்தவன் என்பதால் கூறுகிறேன்

இப்போது திருமணம் பற்றி எதுவும் இல்லை. தமிழ் தெலுங்கு இந்தி என படங்களில் நடித்த பின் திருமணம் பற்றி யோசிக்கலாம் என கலகலப்பாக பேசினார் சூர்யா.

611 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன