
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இரட்டை வேஷத்தில் விக்ரம் 58
விக்ரமின் 58 வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டூடியோஸ் (Viacom 18 Studios) நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கும் இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.
இந்த அஜய் ஞானமுத்து ஏற்கனவே டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என்ற மெகா வெற்றி படங்களை இயக்கியவர்.
இந்த படமும் ஆக்ஷன் த்ரில்லர் வகையறா படமாகத்தான் இருக்கும்.
சீயான் விக்ரம் கேரக்டருக்காக ரொம்பவே மெனக்கெடுவார். அர்ப்பணிப்பு அதிகம் இருக்கும்.
இவர்கள் இருவரும் சேரும் படம் ஆகஸ்ட் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு 2020 கோடையில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் விக்ரம் இரட்டை வேஷத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே அது குறித்த குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளது.
