வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

சனிக்கிழமை மாலை அறிவாலயத்தில் வெற்றி பெற்ற எம்.பி க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில்…

 

சனிக்கிழமை மாலை அறிவாலயத்தில் வெற்றி பெற்ற எம்.பி க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில்…

தமிழ்நாட்டில் நடந்த தேர்தலில் 38 பாராளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது.

பதிவான வாக்குகளில் 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 481 பதிவான வாக்குகளில் 51.5 சதவீத வாக்குகளை திமுக கூட்டணி பெற்றது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நாளை சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் என திமுக வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கனிமொழி எம்.பி.உட்பட வெற்றி பெற்ற சில எம்.பி.க்கள் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

417 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன