தர்பார் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம்..!

55 Views

 

தர்பார் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம்..!

A.R. முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 மாதங்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 29-ந் தேதி தொடங்க உள்ளது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் மும்பையை கலக்கும் ரவுடிகளை சுட்டுத்தள்ளும் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

பட டைட்டில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே டெரர் போலீஸ் கெட்டப்பில் ரஜினிகாந்த் போஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மற்றொரு ரஜினிக்கு ஜோடி இருப்பது போல தெரியவில்லை. இந்த ரஜினியின் மகளாகதான் நிவேதா தாமஸ் நடிக்கிறார்.

தர்பார் படத்தில் பிரதிக் பாபர், தலிப் தாஹில், சுமன், ஆனந்தராஜ் ஆகியோரும் நெகடிவ் வேடங்களில் வருவதாக கூறப்படுகிறது.

இப்போது இன்னொரு முக்கிய வில்லனாக பிரபல இந்தி நடிகர் சுனில் ஷெட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் ‘12பி’ படத்தில் நடித்துள்ளார்.

15 ஆண்டுகளுக்கு முன்பு ஷாருக்கானின் ‘மெய்ன் ஹூன் நா’ என்ற இந்தி படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.

அதன்பிறகு தர்பார் படத்தில்தான் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்பார் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் சுனில் ஷெட்டி கலந்து கொள்வார் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *