வியாழக்கிழமை, ஜூன் 4
Shadow

மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி..!

 

மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி..!

சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. போட்டியிட்ட 19 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளது அக்கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஸ்டாலின் கட்சித்தலைவர் ஆன பின் நடந்த தேர்தலில் இந்த இமாலய வெற்றி குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியை கருணாநிதிக்கு சமர்ப்பிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நேற்று காலை சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலையில் இருந்து கருணாநிதி நினைவிடத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

 

 

கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் உள்பட புதிய எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அனைவரும் நினைவிடத்தை சுற்றி வலம்வந்தனர். அதைத்தொடர்ந்து அண்ணா நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து வணங்கினர்.

அங்கிருந்து வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு வந்த அவர்கள் அங்குள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வணங்கினர்.

542 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன