
நடிகர் சிம்புவுக்கு ஆகஸ்ட்டில் திருமணம், அதுவும் அம்மா பார்த்த பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார் என்று வெளியான செய்தி தமிழ் திரையுலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நடிகர் சிம்பு தரப்பில் இருந்து முதலில் ஆங்கிலத்திலும், பின்னர் தமிழிலும் ஒரு அறிக்கை வெளியானது.
அதில் என் திருமணம் குறித்த வதந்திகள் அதிகம் வருகிறது. இப்போதைக்கு திருமணம் இல்லை. திருமண தகவல் இருந்தால் நானே தெரிவிக்கிறேன்.
இப்போது தொடர்ந்து 3 படங்களில் நடித்து வருகிறேன். பல இயக்குனர், தயாரிப்பாளர் என்னை சந்தித்து பேசினாலும் அந்த படங்கள் எதுவும் முடிவாகவில்லை. ” என்று கூறியிருக்கிறார்.
579 Views
