சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

ரஜினி,விஜய் படங்களால் கால்ஷீட் குளறுபடி… தயாரிப்பாளர், நடிகர்,இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட நயன்தாரா..!

 

 

 

ரஜினி,விஜய் படங்களால் கால்ஷீட் குளறுபடி செய்ததற்கு தயாரிப்பாளர், நடிகர்,இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட நயன்தாரா..!

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் நிவின்பாலியுடன் இணைந்து நயன்தாரா ஒரு படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை பிரபல இயக்குனரும், இளம் நடிகருமான வினித் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன் இயக்குகிறார். இது அவரது முதல் படமாகும். நகைச்சுவை நடிகரான அஜூ வர்கீஸ் தயாரிக்கிறார்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு முக்கால்வாசி முடிவடைந்து விட்ட நிலையில் இன்னும் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறதாம்.

ஆனால் இந்தப் படத்திற்கு கொடுத்த தேதிகளை ரஜினிகாந்த்தின் தர்பார், விஜய்63 படங்களுக்கு மாற்றி கால்ஷீட் கொடுத்து விட்டாராம் நயன்தாரா.

நயன்தாரா செய்த கால்ஷீட் குளறுபடியால் கோடை விடுமுறைக்கு வர வேண்டிய படம் தள்ளிப்போய் உள்ளது.

தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் ஆகிய மூவரிடமும் நட்பு ரீதியாக இந்த தாமதத்திற்கு மன்னிப்பு கேட்ட நயன்தாரா, இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக வாக்கு கொடுத்திருக்கிறார்.

எனவே ஓணம் பண்டிகைக்காவது படத்தை வெளியிட்டு விட வேண்டும் என்று படக்குழுவினர் முயற்சி செய்து வருகிறார்களாம்.

421 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன