வியாழக்கிழமை, ஜூன் 4
Shadow

ஸ்ரீதேவியின் தாய் பாச நடிப்பு மொழி தாண்டி “மாம்” சீனாவில் வசூல் 100 கோடியை தாண்டியது..!

 

நடிகை ஸ்ரீதேவி நடித்து 2017ம் ஆண்டில் ரிலீஸ் ஆன படம் மாம்.

மாற்றாந்தாய் ஆக ஸ்ரீதேவி நடித்திருப்பார். தனக்கு பிறக்காத மகளாக இருந்தாலும் ஸ்ரீதேவி மிக அன்பாக கவனிப்பார்.

தாய் பாசத்தை மிக அழகாக வெளிப்படுத்தி இருப்பார் ஸ்ரீதேவி. அவரின் நடிப்பு மொழிகள் கடந்து சீனாவில் 100 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.


அப்படிபட்ட நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மறைவு, அவருடைய குடும்பத்தினர் மட்டும் இன்றி, திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அவர் மறைந்து ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது தான் மெல்ல மெல்ல ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் மற்றும் மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் ஸ்ரீதேவியின் மறைவு தூக்கத்தில் இருந்து மீண்டு, திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ திரைப்படம் சீனாவில் வெளியாகியாது. அங்கு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்தது மட்டும் இன்றி, 100 கோடி வசூல் சாதனை செய்துள்ளது

இதற்கு நடிகை ஸ்ரீதேவியின் கணவர், போனி கபூர் சமூக வலைத்தளத்தில், மிகவும் உருக்கமாக தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.

510 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன