வியாழக்கிழமை, மே 16
Shadow

நான் கர்ப்பம் தரித்து 22 வாரம் ஆகிறது – வீடியோ வெளியிட்ட எமிஜாக்சன்

 

மதராசபட்டினம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் கால் பதித்த லண்டன் மாடல் எமி ஜாக்சன்.
அதன் பின் ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

2.0 படத்திற்கு பிறகு எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் மீண்டும் லண்டன் சென்றார்.

ஏற்கனவே ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து வந்தார்.

இந்நிலையில் எமி ஜாக்சன் திருமணம் செய்து கொள்ளாமலேயே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

திரையுலகில் இது ஷாக் ஆக பார்க்கப்பட்டாலும் வெளிநாட்டு நடிகை என்பதால் இதெல்லாம் அங்கே சகஜம் என ரசிகர்கள் வாழ்த்தினர்.

கர்ப்பமாக இருக்கும் போதே எமிக்கும் காதலர் ஜார்ஜுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

அதன் பின் அடிக்கடி கர்ப்பமாக இருக்கும் தனது உடல் அழகை புகைப்படங்களாக எடுத்து வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் தான் கர்ப்பம் தரித்து 22 வாரங்கள் ஆகிறது என கர்ப்பமாக இருக்கும் வயிற்றை தடவியபடி வீடியோ வெளியிட்டார்.

இந்த வீடியோவும் புகைப்படங்களும் இபையத்தில் வைரலாக மாறியிருக்கிறது.

345 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன