செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

தமிழக காங்.,எம்.எல்.ஏ., வசந்தகுமார் இன்று ராஜினாமா ..!

 

தமிழக சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலம் ஒன்று குறைகிறது.

நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ., வசந்தகுமார் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.

பாஜக சார்பில் மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட வசந்தகுமார் அபார வெற்றி பெற்றார்.

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் பதவியில் இருக்க முடியாது. இதையடுத்து நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்கிறார்.

முன்னதாக கூட்டணி கட்சித் தலைவரான திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து எம்.பி. ஆனதற்கு வாழ்த்து பெற்ற பின் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யும் தகவலை சொன்னார்.

இதையடுத்து வசந்தகுமார் இன்று தனது நாங்குநேரி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கிறார்.

காங்கிரஸ் உறுப்பினர் ராஜினாமா செய்வதால் சட்டசபையில் காங்கிரஸ் பலம் ஒன்று குறைகிறது. அதே போல திமுக கூட்டணி பலம் 111ல் இருந்து 110 ஆக குறையும்.
வசந்தகுமார் ராஜினாமா செய்யும் நாங்குநேரி தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடைபெறும்.

338 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன