
விந்து தானம், குழந்தையில்லாமை குறித்து பேசும் தாராள மனசு ஹரீஷ் கல்யாணுக்கு உண்டாம்.
பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தயாரிப்பில் ஆயுஷ்மான் குரானா, நடித்த சூப்பர் டூப்பர் வெற்றி படம் ‘விக்கி டோனர்’ தமிழில் தாராள மனசு என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.
2012ல் வெளியான இந்த படம் 2019ல் தமிழ் ரீமேக் ஆகிறது.

இந்த படத்தின் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அவருக்கு ஜோடியாக ரெபா மோனிகா ஜான் நடிக்கிறார். முனீஸ்காந்த் காமெடி கலந்த குணச்சித்திர வேடமேற்கிறார்.
மாரிமுத்து என்ற புதுமுகம் இயக்குனர் ஆக அறிமுகம் ஆகிறார்.

விஷாலின் அயோக்யா படத்தை வெளியிட்ட ஸ்கிரீன் சீன்ஸ் நிறுவனம் இந்த படம் மூலம் தயாரிப்பில் களம் இறங்குகிறது.
இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் குழந்தையில்லாமை, விந்து தானம் குறித்த கருவை மையமாக கொண்டு இந்த படக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியில் வெளியாகி பல விருதுகளை வென்றது. வசூலிலும் சக்கை போடு போட்டது.
ஹரீஷ் கல்யாண் இப்போது தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் ரெபா மோனிகாதான் ஹரீஷ் கல்யாண் ஜோடி.

