
தாதா87 பட இயக்குனரோடு இணைந்து “பீட்ரு” விட தயாராகி வருகிறார் நடிகர் அம்சவர்தன்.
ஓவரா பேசுகிறவர்களைப் பார்த்து என்னமா “பீட்ரு” உட்றான் பார்றா என்று சொல்வார்கள்.
அந்த பீட்ரு வார்த்தையை படத் தலைப்பாக வைத்திருக்கிறார் இயக்குனர் விஜய்ஸ்ரீ.

சமீபத்தில் ரிலீஸ் ஆகி பரவலாக பேசப்பட்ட படம் தாதா 87. கதாநாயகியை திருநங்கையாக காட்டியிருப்பார். சாருஹாசன் தாதாவாக நடித்திருப்பார். இந்த படத்தின் கதையும், திரைக்கதையும் பலராலும் பாராட்டப்பட்டது.
இந்த பட்த்தையும் அதன் மேக்கிங்கையும் பார்த்து விட்டு இயக்குனர் விஜய்ஸ்ரீயை அழைத்து பேசியிருக்கிறார் நடிகர் அம்சவர்தன்.

இப்போது இந்த கூட்டணி இணைந்து பீட்ரு படத்தை உருவாக்கி வருகிறது.
முழு நீள நகைச்சுவை படமாக உருவாகி வரும் இந்த பீட்ருவில் காமெடி நடிகர்கள் பட்டாளம் அதகளப்படுத்தப் போகிறதாம்.
சத்தமில்லாமல் 15நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முதல் கட்ட ஷூட்டிங்கை நிறைவு செய்திருக்கிறார்கள்.
