புதன்கிழமை, அக்டோபர் 28
Shadow

விஜய், அஜீத்தை பின்னுக்கு தள்ளி உச்சத்துக்கு போன சூர்யா என்.ஜி.கே. கட் அவுட்..!

 

சூர்யாவுக்கு இந்தியாவிலேயே மிக உயரமான  215 அடி ‘என்.ஜி.கே’  கட்-அவுட்

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘என்.ஜி.கே’ படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது. செல்வராகவன் இயக்கத்தில் முதன்முதலாக சூர்யா நடிக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகள் நிலவியுள்ளது.

இந்தப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், பொன்வண்ணன், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்துக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்துக்காக சூர்யா ரசிகர்கள் இந்தியாவிலேயே மிக உயரமான கட்-அவுட் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து திருவள்ளூர் சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக இந்த மாதம் 17-ஆம் தேதி பூஜை போடப்பட்டு முழூவீச்சில் வேலைகள் நடந்தன.

இதற்கு முன் விஜய் சர்கார் படத்துக்காக கேரளாவில் விஜய்க்கு 175 அடியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டும், அதனைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்துக்காக அஜித்துக்கு திண்டுக்கல்லில் 190 அடியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டும் தான் மிகப்பெரிய கட்-அவுட்டுகளாகும். இவற்றை விட உயரமாக வைக்க வேண்டும் என்று முடிவு செய்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கட்-அவுட் வேலை இன்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதன் உயரம் சுமார் 215 அடி என்று கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன