வெள்ளிக்கிழமை, மே 1
Shadow

இணயத்தை வைரலாக்கும் வடிவேலுவின் நேசமணி சுத்தியல் மீம்ஸ்… மோடியை வம்புக்கு இழுக்கிறதா பாகிஸ்தான்…!

 

பாகிஸ்தானின் கட்டுமான நிறுவனம் ஒன்று, சுத்தியல் ஒன்றின் படத்தினை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இதற்கு தமிழில் பெயர் என்ன? என கேட்டிருந்தது.

இதற்கு குறும்புக்கார நெட்டிசன் ஒருவர் பதில் அளிக்கையில், ‘இதன் பெயர் சுத்தியல். இது விழுந்தால் டாங், டாங் என சத்தம் கேட்கும். இது காண்டிராக்டர் நேசமணியின் தலையில் விழுந்ததால், அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்’ என கூறியிருக்கிறார்.


அவரை தொடர்ந்து மற்ற நெட்டிசன்களும் தொடர்ந்து பதிலளிக்கவே ஒரு கட்டத்தில், ‘#Pray_for_Nesamani’ எனும் ஹேஷ்டாக்கினை உருவாக்கி அதனை பரப்ப ஆரம்பித்தனர். இதுதான் இன்றைய டாப் டிரெண்டிங். இந்த நேசமணி யார்? 10 வருடங்களுக்கு முன் ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்த நம்ம வைகைபுயல் வடிவேலுதான்.

அந்த படத்தில் ரமேஷ் கண்ணா மாடியில் ஆணியை பிடுங்கும் போது தவறுதலாக சுத்தி மாடியில் இருந்து கீழே நின்ற வடிவேலு நடு மண்டையில் நச்சென விழும்… வடிவேலு சுற்றி சுழன்று மயங்கி சாய்வார்.

இந்த காமெடி மிக பிரபலம். படம் வந்து 10 ஆண்டுகளை கடந்தாலும் அந்த காமெடியை வைத்து இன்று காலை முதல் இணையத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

இணையத்தில் டாப் 1 நிலையில் இந்த காமெடி மீம்ஸ்தான் கலக்கு கலக்கி வருகிறது.

அதே நேரம் பாகிஸ்தான் ஏன் இன்றைக்கு இதுபோல சுத்தியல் படத்தை போட வேண்டும் அதையும் காமெடியாக்கி வைரல் ஆக்க வேண்டும் என்று யோசிக்கிறவர்களுக்கு இந்தியாவின் பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்பதை கிண்டல் செய்யும் விதமாக பாகிஸ்தான் விளையாடுகிறதோ என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.

இதற்கு காரணம் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வரும்படி அண்டை நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பி இருந்த போதும் பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு இல்லை என்பது குறிப்பிடதக்கது.

1,376 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன