வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

சின்ன வயது ஜெயலலிதா ஆக மாற உடம்பு குறைக்கும் கங்கணா..!

 

இந்தியாவிலேயே இந்திராகாந்திக்கு பின் இரும்பு பெண்மணி என்ற பெயர் பெற்றவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

இவரது வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக்கிடம் முறைப்படி அனுமதியும் பெற்றிருக்கிறார்.

ஜெயலலிதா கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம் என கதாநாயகிகள் தேடிய போது கங்கனா ரணாவத் தேர்வானார்.

ஜெயலலிதா முழுநீள வாழ்க்கை வரலாறு என்பதால் ஜெயலலிதா 16 வயதில் நடிக்க வந்தார். இதனால் அந்தளவுக்கு இளமையாக காட்ட கங்கனா உடம்பு குறைத்து வருகிறார்.

ஆரம்பத்தில் இளமையான காட்சிகளை எடுத்து விட்டு படிப்படியாக அவர் அரசியலில் நுழைந்து முதல்வர் ஆனதுவரை படமாக்க திட்டம்.

இதன் காரணமாக தலைவி படம் முடிந்து திரையில் பார்க்க குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று தெரிகிறது.

596 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன