செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 15
Shadow

மீண்டும் தர்பார் ஷூட்டிங் போனார் ரஜினி..!

 

லைகா தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்தது வரும் படம் தர்பார்.

ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் தரபார் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வந்தது.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து ரஜினி உட்பட படக்குழு சென்னை திரும்பியது.

இதற்கிடையில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 29ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

அதே போல திட்டமிட்ட 29ம் தேதி தர்பார் ஷூட்டிங் தொடங்கியது.

இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ள ரஜினிக்கு அழைப்பு வந்தது.

இதையடுத்து ரஜினி 30ம் தேதி டில்லி சென்று மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார்.

அதன் பின் டில்லியில் இருந்து மும்பை சென்ற ரஜினி ஓய்வு எடுக்காமல் தர்பார் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன