
உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் குறித்து தினமும் ஏதாவது ஒரு செய்தி வெளியாகி கொண்டே இருந்தது.
சமீபத்தில் படத்தின் பட்ஜெட் அதிகரிப்பதால் தயாரிப்பு நிறுவனம் மாறக்கூடும் என்ற தகவல் பரவியது.
இந்த சூழலில் தேர்தல் வந்ததால் கதாநாயகன் கமல்ஹாசன் தனது காட்சிக்காக பிரச்சாரம் செய்ய கிளம்பியதால் படப்பிடிப்பு அப்படியே கிடப்பில் இருந்தது.
இந்த சூழலில் இனி இந்தியன் 2 வராது என்றும் டிராப் என்றெல்லாம் தகவல் பரவியது.
இதை உறுதி படுத்தும் விதமாக இயக்குனர் ஷங்கருக்கு பட நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியது என்ற தகவல் கோலிவுட்டை பரபரப்பாக்கியது.

இந்த நிலையில் உண்மையான தகவல் என்ன? நிஜத்தில் இந்தியன் 2 வருமா வராதா என விசாரித்த போது… பல சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன.
அதில் முதன்மையானது திட்டமிட்டபடி இந்தியன் 2 உருவாகும். லைகா நிறுவனம் தான் படத்தை தயாரிக்கிறது.
கமல்ஹாசன் அரசியல் பணியில் இருந்ததால் தாமதமாகவில்லை படம் தொடங்கும் போதே எப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அந்த பணிகளை செய்ய செல்வேன் என்று கமல் சொல்லியிருக்கிறார்.
அதோடு இந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு விஷயங்கள் மாறியதால் இயக்குனர் ஷங்கரை அழைத்து புதிய பட ஷெட்யூல் விவரங்களை தயாரிப்பு நிறுவனம் கேட்டு வாங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இதத்தான் ஷங்கருக்கு நோட்டீஸ் என கிளப்பி விட்டிருக்கிறார்கள்.
ஆக இந்தியன் 2 திட்டமிட்டபடி எடுத்து முடித்து ரிலீஸ் ஆகுமாம்.
இந்த தகவல் கமல்ஹாசன் ரசிகர்களை கண்டிப்பாக உற்சாகம் கொள்ள செய்யும்.
