புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

வரலட்சுமி ஷூட்டிங் ஸ்பாட்டில் சரத்குமார் கொடுத்த ஷாக்..!

 

வரலட்சுமி ஷூட்டிங் ஸ்பாட்டில் சரத்குமார் கொடுத்த ஷாக்..!

வரலட்சுமி நடிப்பில் சேஸிங் என்ற பெயரில் ஆக்‌ஷன் திரில்லர் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை கே.வீரக்குமார் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை படக்குழு சமீபத்தில் படமாக்கியுள்ளது.

அதில் வரலட்சுமி பாதுகாப்பு கயிறு எதையும் பயன்படுத்தாமல், டூப் ஏதுமில்லாமல் சண்டை போட்டிருக்கிறார். இந்த காட்சியை படம்பிடித்துக் அதன் மேக்கிங் வீடியோவை வரலட்சுமி இணையத்தில் வெளியிட்டார்.

இதற்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்தது.

இந்த நிலையில் வரலட்சுமியின் படப்பிடிப்பு நடந்து வரும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீரென வரலட்சுமியின் அப்பா சரத்குமார் வந்து படக்குழுவை வாழ்த்தினார். குறிப்பாக பாதுகாப்பு ரோப் இல்லாமல் சண்டை காட்சிகளை வடிவமைத்த ஸ்டண்ட மாஸ்டரையும், நடித்த வரலட்சுமியையும் பாராட்டினார்.

599 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன