புதன்கிழமை, மே 15
Shadow

மாநில மொழியில் புதிய சாதனை படைத்த ரவுடி பேபி பாடல்…!

 

தனுஷ் நடிப்பில்  யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான மாரி 2  படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.அதில், ரவுடி பேபி பாடலை தனுஷ் எழுதி பாடியிருந்தார்.

இந்தப் பாடலுக்கு இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். இந்தப் பாடலில் தனுஷின் நடனத்தைவிட சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.

‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை யூடியூப் பக்கத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைராலான இந்தப் பாடல் பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று புதிய சாதனை படைத்தது.

மேலும் இந்தப் பாடல் வெளியான 16 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளையும் 41 நாட்களில் 200 மில்லியன் பார்வைகளையும், 69 நாட்களில் 300 மில்லியன் பார்வைகளையும், 104 நாட்களில் 400 மில்லியன் பார்வைகளையும் 157 நாட்களில் 500 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது.

இதன் மூலம் தென்னிந்திய மொழிகளில் வெளியான பாடல்களிலேயே அதிக பார்வைகளைப் பெற்றுள்ளது .

வொண்டர்பார் நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில், “எங்களுடைய ரவுடி பேபி நீங்கள் காட்டிய அன்பால் பேச்சின்றி திகைத்துப் போய் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

340 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன