வியாழக்கிழமை, ஜூலை 30
Shadow

இரட்டை வேடத்தில் விஜய் : ’தளபதி 63’ லேட்டஸ்ட் அப்டேட்

இரட்டை வேடத்தில் விஜய் : ’தளபதி 63’ லேட்டஸ்ட் அப்டேட்

ஏஜிஎஸ் புரொடக்க்ஷன் தயாரிப்பில் அட்லி இயக்கும் புதிய படத்தில் தளபதி விஜய் நடிக்கிறார். இது விஜய்க்கு 63 வது படமாகும். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவருடன் பரியேறும் பெருமாள் புகழ் கதிர், வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடிக்கிறார்கள். விவேக் பாடல் எழுதுகிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்

தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தின் பெயர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இப்படத்தின் ஷாருக்கான் வில்லன் கதாப்பாத்திரத்தில் தோன்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியானதால் ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஏற்கனவே ரஜினி நடிக்கும் தர்பார் படத்திலும் ரஜினி இரு வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

815 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன