வியாழக்கிழமை, ஜூன் 4
Shadow

நயன்தாராவுக்கு ஓய்வு வேணுமாம்… ஹாலிடே மூடுக்கு வந்துட்டாராம்..!

 

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது நயன்தாரா தான்.
இப்போது ரஜினியுடன் தர்பார், விஜய்யுடன் தளபதி 63, சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படம், தெலுங்கில் ஒரு படம், மலையாளத்தில் நிவின்பாலியுடன் ஒரு படம் என கால்ஷீட் டைரியை புல்லாக வைத்திருக்கிறார்கள்.

இடைவெளி இல்லாமல் தொடர்ந்து ஷூட்டிங் ஷூட்டிங் என படு பிசியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டவர் இப்போது எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் வேணும் என ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லீவு விட்டுடுட்டு ஓய்வு எடுக்க வெளி நாட்டுக்கு கிளம்பிட்டாங்க.

சொகுசு கார்ல கூலிங்கிளாஸ் போட்டு செம ஸ்டைலா போஸ் கொடுக்க அதை அவருக்கு நெருக்கமானவங்க படம் பிடிச்சிருக்காங்க.

தனது ரசிகர் டிவிட் பக்கத்துல அந்த படங்களை பதிவிட்டு “எனக்கு கொஞ்சம் ஓய்வு” வேணும் என பதிவு போட்டுவிட்டு ஹாலிடே மூடில் இருப்பதாக சொல்லி இருக்கிறார் நயன்தாரா.

இது நயன்தாரா பெயரில் உள்ள ஒரு விசிறி பக்கமாக இருந்தாலும் இதை பின்பற்றும் நபர்கள் எண்ணிக்கை சுமார் 2 மில்லியன் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

815 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன