ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

விழுந்து நொறுங்கியதா… இந்திய விமானப்படை விமானம் திடீர் மாயம்… அதிர்ச்சியில் இராணுவம்..!

 

இந்திய விமானப்படை விமானம் திடீர் மாயம்… அதிர்ச்சியில் இராணுவம்..!

இந்திய விமானப்படைக்கு சொந்தமான அண்டனோவ் ஏ.எந்32 ரக போக்குவரத்து விமானம் அசாமின் ஜோர்கத் விமான தளத்திலிருந்து திங்கள் கிழமை மதியம் 12.25க்கு புறப்பட்டுள்ளது.

அதில் விமானி உட்பட மொத்தம் 13 பேர் பயணித்திருக்கிறார்கள். மதியம் 1 மணியளவில் அருணாச்சல பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் ராடார் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. அதிகாரிகள் எவ்வளவு முயற்சி செய்தும் விமானத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து பாதுகாப்புத்துறைக்கு புதிதாக பதவியேற்ற அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது டிவிட்டர் பதிவில் “காணாமல் போன விமானம் குறித்து விமானப்படை துணை தலைவர் ராகேஷ் சிங்கிடம் பேசியுள்ளேன். விமானத்தில் பயணித்த அனைவரும் நலமுடன் திரும்ப பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மாயமான இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5 பயணிகள் இருந்த நிலையில் அவர்களது கதி என்ன? என்ற கேள்வி அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மாயமான இந்திய விமானப்படையின் ஏ.என்.32 ரக விமானத்தின் உடைந்த பாகங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக திடுக்கிடும் செய்தி வெளிவந்துள்ளது.

அருணாச்சலபிரதேச மாநிலத்தின் மேற்கு சியாங்க் மாவட்டத்தின் டாடோ என்ற இடத்தில் விமானத்தின் பாகங்கள் சிதறி கிடப்பதாகவும், இதுகுறித்து செய்தி தெரிய வந்ததும் இந்திய விமானப்படையினர்களும் மீட்புப்படையினர்களும் அந்த இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மீட்புப்பணிக்கு சென்றவர்கள் தரும் தகவலுக்கு பின்னரே விமானத்தில் பயணம் செய்த 13 பேர்களின் கதி என்ன என்பது தெரிய வரும்.

மோடி அரசு இரண்டாம் முறையாக பதவி ஏற்ற பின் நடக்கும் முதல் இராணுவ விமான விபத்து இது.

451 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன