செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

நயன்தாராவுக்கு கேக் ஊட்டிய ஹீரோ..!

 

தமிழ் சினிமாவின் இப்போதைய லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா தான்.

தமிழ் தெலுங்கு மலையாள மொழிகளில் பிசியாக இருக்கும் நடிகை நயன்தாரா தொடர்ச்சியாக ரஜினியின் தர்பார், விஜய்யின் தளபதி 63 படத்திற்கு தேதிகள் கொடுத்திருந்தார்.

இதற்கிடையில் ஏற்கனவே நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் நடித்து வந்த லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தின் தேதிகளை ரஜினி, விஜய் படங்களுக்கு கொடுத்து விட்டதால் நிவின் பாலி படம் நயன்தாரா தேதி கிடைக்காமல் நின்றது.

இதற்கு வருத்தம் தெரிவித்து நயன்தாரா கடிதம் அனுப்பினார். அதில் குறிப்பிட்டது போல மாற்றி கொடுத்த தேதிகளில் நடித்து கொடுத்தார்.

ஷூட்டிங் கடைசி நாள் நிவின் பாலி கேக் வெட்டி நயன்தாரா உட்பட குழுவுக்கு கொடுத்திருக்கிறார். இதில் நயன்தாராவுக்கு நிவின் கேக் ஊட்டிவிட… நயன்தாரா நாசுக்காக அதை தவிர்க்க அந்த இடமே அமர்களமாக கொண்டாடி இருக்கிறார்கள்.

இந்த படம் ஓணம் பண்டிகையை கொண்டாட வருகிறது.

384 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன