சனிக்கிழமை, ஆகஸ்ட் 1
Shadow

நாசரை எதிர்த்து பாக்யராஜ், விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டி – சூடு பிடிக்கும் நடிகர் சங்கம்

 

நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து இயக்குனர் பாக்யராஜும், பொதுச் செயலாளர் பத்விக்கு விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகள் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு அணி போட்டியிடுகிறது.

பொது செயலாளர் பதவிக்கு விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார்.

தலைவர பதவிக்கு விஷால் அணியை சேர்ந்த நாசரை எதிர்த்து ஐசரி கணேஷ் அணி சார்பில் இயக்குனர் நடிகர் பாக்யராஜ் தேர்தலில் போட்டியிடுகிறார்.

பாண்டவர் அணியை எதிர்த்து ஐசரி கணேஷ் ஸ்டிராங்கான பிரபலங்களை களம் இறக்குவதால் இந்த முறை போட்டியும், வெற்றி விகிதமும் கடும் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.

 

அதே நேரம் இன்னொரு பக்கம் போட்டி இல்லாமல் பதவிகளை பிரித்து கொள்ளவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

752 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன