வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

Tag: நடிகர் சங்கம்

நடிகர் சங்கத்துக்கு உதவுங்கள் முன்னணி நடிகர்,நடிகைகளுக்கு பூச்சி முருகன் வேண்டுகோள்!

நடிகர் சங்கத்துக்கு உதவுங்கள் முன்னணி நடிகர்,நடிகைகளுக்கு பூச்சி முருகன் வேண்டுகோள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண நிதி உதவி அளிக்க வேண்டும் என முன்னணி நடிகர், நடிகைகளுக்கு நடிகர் சங்க அறக்கட்டளை முன்னாள் உறுப்பினர் பூச்சி முருகன் வேண்டுகோள் விடுத்தார்.   இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்:   முன்னணி நடிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்... கரோனா வைரஸ் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும் திடீர் ஊரடங்கால் சினிமாத்துறையே முடங்கி கிடக்கிறது. இந்த திடீர் முடக்கத்தால் திரைப்பட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களில் 90 சதவீதம் பேர் அன்றாட சம்பளத்துக்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தான். இவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஃபெஃப்சி சார்பில் திரை பிரபலங்களிடம் உதவி கேட்டு வாங்கி உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது போல நமது சங்க உறுப்பினர்களுக்க...
நடிகர் சங்க நில மோசடி வழக்குக்கு பயந்து அதிமுகவில் ஐக்கியமானாரா ராதாரவி? – கோடங்கி ஸ்பெஷல்

நடிகர் சங்க நில மோசடி வழக்குக்கு பயந்து அதிமுகவில் ஐக்கியமானாரா ராதாரவி? – கோடங்கி ஸ்பெஷல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்க நில மோசடி வழக்குக்கு பயந்து அதிமுகவில் ஐக்கியமானாரா ராதாரவி? நடிகர் ராதாரவி முதலில் திமுகவில் இருந்தார். பின்னர் அதிமுக வந்தார். பின்னர் அங்கிருந்து ஜெயலலிதா வெளியேற்றினார். அதன் பின் மீண்டும் திமுக வந்தார். சமீபத்தில் நடைபெற்ற கொலையுதிர் காலம் பட விழாவில் நடிகை நயன்தாராவை தரக்குறைவான வகையில் விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். இதனால் திமுக தலைமையால் கட்சியில் இருந்து ராதாரவி நீக்கப்பட்டார். அதன் பின் எந்த கட்சியிலும் சேராமல் இருந்த ராதாரவி திடீரென மீண்டும் அதிமுகவில் இணைந்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து அதிமுகவில் ஐக்கியமாகி விட்டார். இந்த திடீர் சேர்க்கைக்கு நடிகர் சங்க நில மோசடி வழக்கு விசாரணையும், பயமும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ராதாரவி பதவியில் ...
ரஜினி எங்களை வாழ்த்தினார் – வேட்பு மனு தாக்கல் செய்தபின் ஐசரி-பாக்யராஜ் அணி பேட்டி

ரஜினி எங்களை வாழ்த்தினார் – வேட்பு மனு தாக்கல் செய்தபின் ஐசரி-பாக்யராஜ் அணி பேட்டி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் இந்த அணியினர் சென்னை தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய மொத்த அணியினரும் ஒரே பேருந்தில் ஒற்றுமையாக வந்திறங்கி அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினர். வேட்புமனு தாக்கல் செய்து முடித்த கையோடு பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாடினர். முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்களின் தலைமையில் இந்த அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என்று பெயர் சூட்டப்பட்டது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரிடம் ஆலோசித்த பிறகே இந்த தேர்தல...
நாசரை எதிர்த்து பாக்யராஜ், விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டி – சூடு பிடிக்கும் நடிகர் சங்கம்

நாசரை எதிர்த்து பாக்யராஜ், விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டி – சூடு பிடிக்கும் நடிகர் சங்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து இயக்குனர் பாக்யராஜும், பொதுச் செயலாளர் பத்விக்கு விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகள் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு அணி போட்டியிடுகிறது. பொது செயலாளர் பதவிக்கு விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார். தலைவர பதவிக்கு விஷால் அணியை சேர்ந்த நாசரை எதிர்த்து ஐசரி கணேஷ் அணி சார்பில் இயக்குனர் நடிகர் பாக்யராஜ் தேர்தலில் போட்டியிடுகிறார். பாண்டவர் அணியை எதிர்த்து ஐசரி கணேஷ் ஸ்டிராங்கான பிரபலங்களை களம் இறக்குவதால் இந்த முறை போட்டியும், வெற்றி விகிதமும் கடும் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.   அதே நேரம் இன்னொரு பக்கம் போட்டி இல்லாமல் பதவிகளை பிரித்து கொள்ளவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது....
நடிகர் சங்க நில மோசடி புகார் காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக ராதாரவி, சரத்குமாருக்கு சம்மன்..!

நடிகர் சங்க நில மோசடி புகார் காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக ராதாரவி, சரத்குமாருக்கு சம்மன்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தை முறை கேடாக விற்பனை செய்த புகாரில் நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் ராதாரவி, சரத்குமார் உட்பட 4 பேர் மீது மோசடி புகாரை நடிகர் சங்க தலைவர் நாசர் கொடுத்திருந்தார். அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சார்ஜ் ஷீட் போட்ட பிறகும் ராதாரவி, சரத்குமார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசியல் அழுத்தம் காரணமாக இந்த வழக்கு தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் நடிகர் சங்க முன்னாள் நிர்வாகி சரத்குமார் மற்றும் ராதாரவி வரும் 20ஆம் தேதி காஞ்சிபுரம் குற்றவியல் போலீசாரிடம் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க நிலம் கையாடல் செய்ததாக சங்கத் தலைவர் நாசர் தொடர்ந்த வழக்கில் வரும் 20ஆம் தேதி காஞ்சீபுரம் குற்றவியல் போலீசாரிடம் முன...
நடிகர் சங்கத் தேர்தல் நடத்த நீதியரசர் நியமனம்… விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ராதிகா தலைமையில் புது அணி போட்டியா..?

நடிகர் சங்கத் தேர்தல் நடத்த நீதியரசர் நியமனம்… விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ராதிகா தலைமையில் புது அணி போட்டியா..?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் சங்கத் தேர்தல் நடத்த நீதியரசர் நியமனம்... விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ராதிகா தலைமையில் புது அணி போட்டியா..?   தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாசர் விஷால் தலைமையில் பாண்டவர் அணி என்ற பெயரில் போட்டியிட்டார்கள். பெரும் பரபரப்புடன் பொதுத் தேர்தல் போல பெரும் எதிர்பார்ப்புடன் நடந்த தேர்தலில் நாசர் தலைவராகவும் விஷால் பொதுச்செயலாளராகவும் கார்த்தி பொருளாளராகவும் தேர்வு பெற்றார்கள். இவர்களது பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன்நிறைவடைந்த நிலையில் நடிகர் சங்க கட்டட பணிகள் நடந்து வருவதால் அதையே காரணம் காட்டி 6 மாத காலத்துக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், 6 மாத கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி செயற்குழு கூட்டம...
நடிகர் சங்கத்துக்கு விரைவில்  தேர்தல் – நாசர் அறிவிப்பு

நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் – நாசர் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  சென்னை தியாகராய நகரில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. செயற்குழு கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் நாசர், நடிகர் சங்க தேர்தல் தேதி சட்டரீதியாக அறிவிக்கப்படும் என கூறினார். நடிகர் சங்க துணை தலைவர் நடிகர் பொன்வண்ணன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இந்த கூட்டத்தில் தேர்தல் பற்றிய ஆலோசனையே முக்கிய விசயமாக இருந்தது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் மிகவிரைவில் நியமிக்கப்படுவார். தேர்தல் தேதியை அவர் அறிவிப்பார். நாளை முதல் தேர்தல் வேலைகள் நடைபெறும். இதேபோன்று நடிகர் சங்க கட்டிட வேலைகளை முடிக்க கடும் முயற்சிகள் செய்து வருகிறோம் என கூறினார்....