நடிகர் சங்க நில மோசடி புகார் காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக ராதாரவி, சரத்குமாருக்கு சம்மன்..!

46 Views

 

நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தை முறை கேடாக
விற்பனை செய்த புகாரில் நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் ராதாரவி, சரத்குமார் உட்பட 4 பேர் மீது மோசடி புகாரை நடிகர் சங்க தலைவர் நாசர் கொடுத்திருந்தார்.

அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் சார்ஜ் ஷீட் போட்ட பிறகும் ராதாரவி, சரத்குமார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அரசியல் அழுத்தம் காரணமாக இந்த வழக்கு தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் நடிகர் சங்க முன்னாள் நிர்வாகி சரத்குமார் மற்றும் ராதாரவி வரும் 20ஆம் தேதி காஞ்சிபுரம் குற்றவியல் போலீசாரிடம் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க நிலம் கையாடல் செய்ததாக சங்கத் தலைவர் நாசர் தொடர்ந்த வழக்கில் வரும் 20ஆம் தேதி காஞ்சீபுரம் குற்றவியல் போலீசாரிடம் முன்னாள் நிர்வாகிகள் ராதாரவி சரத்குமார் ஆஜராக போலீசார் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்.

வேங்கடமங்கலம் கிராமத்தில் உள்ள நிலத்தை தான் முறைகேடாக விற்பனை செய்து விட்டார்கள் என்பது குற்றச்சாட்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *