நடிகர் சங்க நில மோசடி வழக்குக்கு பயந்து அதிமுகவில் ஐக்கியமானாரா ராதாரவி? – கோடங்கி ஸ்பெஷல்

179 Views

 

நடிகர் சங்க நில மோசடி வழக்குக்கு பயந்து அதிமுகவில் ஐக்கியமானாரா ராதாரவி?

நடிகர் ராதாரவி முதலில் திமுகவில் இருந்தார். பின்னர் அதிமுக வந்தார். பின்னர் அங்கிருந்து ஜெயலலிதா வெளியேற்றினார். அதன் பின் மீண்டும் திமுக வந்தார்.

சமீபத்தில் நடைபெற்ற கொலையுதிர் காலம் பட விழாவில் நடிகை நயன்தாராவை தரக்குறைவான வகையில் விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார்.

இதனால் திமுக தலைமையால் கட்சியில் இருந்து ராதாரவி நீக்கப்பட்டார்.

அதன் பின் எந்த கட்சியிலும் சேராமல் இருந்த ராதாரவி திடீரென மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து அதிமுகவில் ஐக்கியமாகி விட்டார்.

இந்த திடீர் சேர்க்கைக்கு நடிகர் சங்க நில மோசடி வழக்கு விசாரணையும், பயமும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ராதாரவி பதவியில் இருந்த போது காஞ்சிபுரம் வேங்கட மங்கலம் கிராமத்தில் தானமாக இடம் வழங்கப்பட்டது. இந்த நிலத்தை சங்க விதியை மீறி மோசடி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்துவிட்டார் என்பது ராதாரவி – சரத்குமார் மீதான குற்றச்சாட்டு.

இந்த குற்றச்சாட்டுகளை சொல்லிதான் கடந்த முறை பாண்டவர் அணி பெரும் வெற்றி பெற்றது. அதிலும் ராதாரவி அதன் பின் நடிகர் சங்கம் பக்கமே வரவில்லை.

பாண்டவர் அணி வென்றதும் வேங்கட மங்கலம் நில மோசடி குறித்து காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் நில மோசடி வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

கடந்த மாதம் ராதாரவி, சரத்குமார் இருவரையும் விசாரணைக்கு ஆஜர் ஆகும்படி போலீஸ் சம்மன் அனுப்பி இருந்தது.

அதே போல நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால் இருவரையும் விசாரணைக்கு அழைத்தார்கள்.

நாசரும், விஷாலும் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நடந்த விவரங்களை சொல்லிவிட்டு வந்தார்கள்.

நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதால் நில மோசடி வழக்கு வேகம் எடுத்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் சங்க நில மோசடி வழக்கு தன் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக ராதாரவியை அச்சுறுத்தி வந்ததால் அதில் இருந்து தற்காலிகமாக தப்பிக்க ஒரே முடிவு மீண்டும் அரசியல்தான் என யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஆளும் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு இப்போதைக்கு நில மோசடி வழக்கில் இருந்து தப்பிக்கலாம் என ராதாரவி போடும் கணக்கு சரியாக வருமா… அல்லது தப்புக்கணக்காக முடியுமா என்பது நடிகர் சங்க தேர்தலுக்கு பின் தெரிய வரும்.

காரணம் பாக்யராஜ்-ஐசரி கணேஷ் கூட்டணிக்கு ராதாரவி சத்தமில்லாமல் ஆதரவு திரட்டி வருகிறார். இதற்கு காரணம் ஒரு வேளை பாக்யராஜ் அணி வென்றால் தன் மீதான அனைத்து வழக்குகளையும் நடிகர் சங்கம் வாபஸ் பெற வேண்டும் என எழுதப்படாத வார்த்தை ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறதாம். அதிலும் நம்பிக்கை இல்லாததால் தான் அவசர அவசரமாக அதிமுகவில் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டிருக்கிறார் ராதாரவி..!

– கோடங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *