செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

நடிகர் சங்கத் தேர்தல் நடத்த நீதியரசர் நியமனம்… விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ராதிகா தலைமையில் புது அணி போட்டியா..?

நடிகர் சங்கத் தேர்தல் நடத்த நீதியரசர் நியமனம்… விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ராதிகா தலைமையில் புது அணி போட்டியா..?

 

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாசர் விஷால் தலைமையில் பாண்டவர் அணி என்ற பெயரில் போட்டியிட்டார்கள்.

பெரும் பரபரப்புடன் பொதுத் தேர்தல் போல பெரும் எதிர்பார்ப்புடன் நடந்த தேர்தலில் நாசர் தலைவராகவும் விஷால் பொதுச்செயலாளராகவும் கார்த்தி பொருளாளராகவும் தேர்வு பெற்றார்கள்.

இவர்களது பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன்நிறைவடைந்த நிலையில் நடிகர் சங்க கட்டட பணிகள் நடந்து வருவதால் அதையே காரணம் காட்டி 6 மாத காலத்துக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 6 மாத கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் விஷால், கார்த்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

அதே சமயம், கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன்ஆகியோர் , “தேர்தலுக்காக ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து அதன்பின்னர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்கள்.

இந்நிலையில் மீண்டும் நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க நடிகர்சங்க அவசர செயற்குழு ஒப்புதல் அளித்தது.

கூட்டத்தின் முடிவில், நடிகர் சங்கத்தலைவர் நாசர் கூறியதாவது ,நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க நடிகர்சங்க சிறப்பு செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது. நாளை(15.5.19) முறைப்படி நடிகர்சங்க அலுவலகம் தேர்தல் நடத்தும் நீதிபதியிடம் ஒப்படைக்கப்படும். சங்கத்தின் வரவுசெலவு கணக்குகள் அனைத்தையும் அவர் சரிபார்த்து அலுவலக நடவடிக்கைகளை மேற்கொள்வார்அதன் பிறகு அவரே தேர்தல் நடக்கும் தேதியையும் அறிவிப்பார்.தேர்தல் நடத்த நாங்கள் மூன்று இடங்களை பரிந்துரை செய்வோம்.அதில் ஒரு இடத்தை நீதியரசர் தேர்ந்தெடுத்து அறிவிப்பார்.’நடிகர் சங்க நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வா?என்பது தேர்தல் தேதி அறிவித்த பின்பே தெரியவரும்’தேர்தலில் மீண்டும் எங்கள் “பாண்டவர் அணி ” களமிறங்குகிறது. நாங்கள் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் கூடுமானவரை நிறைவேற்றி இருக்கிறோம் என்றார்கள்.

நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணியை எதிர்த்து ராதிகா சரத்குமார் தலைமையில் ஒரு அணி களமிறங்கப் போவதாக ஒரு பரபரப்பு கோலிவுட்டில் பரவியது.
இது உண்மையா என ராதிகா சரத்குமார் தரப்பில் விசாரித்தால் “நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் செய்தியில் சிறிதும் உண்மையில்லை. நடிப்பதற்கே நேரம் இல்லாமல் இருக்கும் போது இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை” என்று பதில் வருகிறது.

 

514 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன