
நடிகர் சிவகுமார் பாணியில் செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை தட்டிவிட்ட ஹரியானா முதல்வர்…!
இடம் பொருள் தெரியாமல் செல்பி மோகம் உலகம் முழுதும் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணவிழாவிவில் கலந்துகொண்ட நடிகர் சிவக்குமார் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது சமூகவலைத்தளங்களில் பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அதே பாணியில் ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கர்னால் கிராமத்திற்கு சென்றிருந்தார்.
அப்போது அங்கு தன்னை நோக்கி வந்த இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயற்சிப்பதை பார்த்ததும் ஆத்திரமடைந்த மனோகர் லால் அந்த இளைஞனின் கையைப் பிடித்து ஓரமாக இழுத்துவிட்டதோடு, அந்த வாலிபரை முதல்வர் முறைத்தபடியே அங்கிருந்து நகர… இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் பெரும் வைரல் வீடியோ.
#WATCH Haryana CM Manohar Lal Khattar pushes aside a man who tries to take a selfie with him, at an event in Karnal. pic.twitter.com/HZK10VWWQy
— ANI (@ANI) June 6, 2019
அந்த வீடியோவுக்கு கீழே “பாத்தாச்சி பாத்தாச்சி இதெல்லாம் ஏற்கனவே நாங்க பாத்தாச்சி என்று சிவக்குமார் செல்போனை தட்டிவிடும் படத்தை போட்டு கலாய்த்து வருகிறார்கள்.
