ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 2
Shadow

கண்டக்டர் தொடங்கி சூப்பர் ஸ்டார் வரை பாடமாக இடம் பிடித்த ரஜினி வாழ்க்கை!

 

பாட புத்தகத்தில் இடம் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்க்கை..!

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு ஆங்கில பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகர்கள் வரிசையில் அமிதாப்புக்கு அடுத்த இடத்தில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினி 70 வயதிலும் சுறுசுறுப்பாக படங்களில் நடித்து வருகிறார்.

இப்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார்.

அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் அரசியலில் களம் காணப்போவதாக சொல்லி இருக்கிறார்.

ஜாக்கிஜானுக்கு பிறகு ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அவருக்கு மகுடம் சூடும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஐந்தாம் வகுப்பு ஆங்கில பாடபுத்தகத்தில் சாதனையாளர்களின் புகைப்படம் மற்றும் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய பக்கத்தில் ரஜினிகாந்தின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

அதில் ரஜினியின் படத்தோடு ’ பேருந்தில் நடத்துனராக தன் வாழ்க்கையை ஆரம்பித்த ரஜினி திரைத்துறையில் நுழைந்து சூப்பர் ஸ்டாராக மாறி இன்று ஒரு கலாச்சார அடையாளமாக உயர்ந்துள்ளார்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஜினியோடு சார்லி சாப்ளின், ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகியோரின் படங்களும் இடம் பெற்று உள்ளது.

554 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன