புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

 

விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

சூப்பர் ஹிட் ஆன அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்தாலும் , படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்.

படம் வெளிவந்த ஒரே வாரத்தில் இந்த படம் ரூ.125 கோடி வசூல் செய்ததாக கே.ஜி.ஆர். பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் தற்போது கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்திற்கு ‘க/பெ ரணசிங்கம்’ என்ற டைட்டிலை படக்குழுவினர் வைத்துள்ளனர்.

முழுக்க முழுக்க கிராமிய மண வாசனையுடன் உருவாகவிருக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே இந்த ஜோடி பல படங்களில் நடித்து சூப்பர் ஹிட் ஜோடியாக வலம் வந்திருக்கிறது. மீண்டும் இந்த ஜோடி இணையும் இந்த படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருமாண்டி என்பவர் இயக்கவுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார்.

534 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன