சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

ஹனிமூன் நகரத்துக்கு சுற்றுலா போன நயன்தாரா-விக்னேஷ்சிவன் காதல் ஜோடி..!

 

நாங்க ஹனிமூன் நகரத்துக்கு போயிருக்கோம் என நயன்தாரா-விக்னேஷ் ஜோடி ஸ்டேட்ஸ் போட்டு ரசிகர்கள் ஹாட் பீட்டை எகிற வைத்துள்ளார்.


தமிழ் சினிமாவில் லாங் டைம் ஹாட் காதல் ஜோடி நயன்தாரா – விக்னேஷ் சிவன் தான்.

இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்து இளசுகளின் இதய துடிப்பை எகிற வைத்து, பெருசுகளை பெருமூச்சு விட செய்வார்கள்.

அடிக்கடி டேட்டிங் என்ற பெயரில் நாடு நாடாக சுற்றும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி இப்போது காதல் ஜோடிகளின் முக்கிய சுற்றுலாத்தளமாக பார்க்கப்படும் சாண்டோரினி நகரில் இருவரும் ஜோடியாக வலம் வருகின்றனர்.

இந்த ஊருக்கு வருவதற்கு முன் “எனக்கு கொஞ்சம் பிரேக் வேணும்” ஹாலிடே மூட் என நயன்தாரா ரசிகர் பக்கத்தில் ஒரு பதிவு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த காதல் ஜோடி போய் உள்ள இந்த நகரம் புதுத்தம்பதிகள் ஹனிமூன் செல்லும் முக்கிய நகரமாக பார்க்கப்படுகிறது.

இங்கே இந்த ஜோடி சென்றிருப்பதை
இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ‘நான் வாழ்நாளில் செல்ல வேண்டும் என்று நினைத்த கனவு உலகத்திற்கு பறந்து கொண்டிருக்கின்றோம்’ என கூறி பதிவிட்டு ரசிகர்களின் ஹாட் பீட்டை எகிற வைத்துள்ளார்.

445 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன