
சிம்பு – கவுதம் கார்த்திக் இணையும் படம் ஷூட்டிங் தொடங்கியது..!
கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான சிவராஜ்குமாரின் ‘முஃப்தி’ என்ற அதிரடி ஆக்சன் படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் சிம்பு கேங்க்ஸ்டராகவும், கவுதம் கார்த்திக் போலீசாகவும் நடிக்கவுள்ளனர்.
சிம்பு ஏற்கனவே ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் கேங்க்ஸ்டராக நடித்திருந்தாலும் கவுதம் கார்த்திக் முதல்முறையாக போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

முஃப்தி’ படத்தை கன்னடத்தில் இயக்கிய அதே இயக்குனர் நார்தன் தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.
இந்த படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்களை மதன் கார்க்கி எழுதவுள்ளார். இந்த படம் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் 20வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் அதோடு சேர்த்து வெங்கட்பிரபு இயக்கவுள்ள ‘மாநாடு’ படம் என சிம்பு அடுத்தடுத்து பிசியாக உள்ளார்.

