வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

திரைத்துறைக்கு மத்திய அரசு கடிவாளம்… இனி இஷ்டத்துக்கு தலைப்பு வைக்க முடியாது…!

 

திரைத்துறைக்கு மத்திய அரசு கடிவாளம்…
இனி இஷ்டத்துக்கு தலைப்பு வைக்க முடியாது…!

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு இனிமேல் அந்தந்த மாநிலங்களில் உள்ள பிராந்திய மொழிகளில் தான் டைட்டில் வைக்க வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியில் இருந்த போது தமிழில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு என்ற சட்டம் இருந்ததால் அனைத்து தமிழ்ப்படங்களுக்கும் தமிழ்ப்பெயர்கள் தான் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபின்னர் வரிவிலக்கு நீக்கப்பட்டது.

இதனையடுத்து திரையுலகினர் தங்கள் இஷ்டத்திற்கு ஆங்கில பெயர்களை டைட்டிலாக வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களுக்கு அந்தந்த பிராந்திய மொழிகளில் தலைப்பு மற்றும் நடிகர்களின் பெயரை போட வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டாலும் , இந்த அறிவிப்பு திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரணம்… இனிமேல் சீரியல் , சினிமா எதற்கும் தங்கள் இஷ்டத்திற்கு டைட்டில் வைக்க முடியாது.

அதிலும் குறிப்பாக சமீபத்திய மத்திய அரசின் மும்மொழி கொள்கை அறிவிப்பால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி பின்னர் மத்திய அரசு அந்த அறிவிப்பை திரும்ப பெற்றதற்கு மாற்றாக மாநில அரசுகளின் ஆதரவை பெற இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

821 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன