சனிக்கிழமை, ஜூலை 11
Shadow

நடிப்பை பார்க்காமல் உடலை பார்த்தார்கள் மேடையில் கதறிய பிரபலத்தின் மகள்..!

 

நடிகர் பிரபல தயாரிப்பாளர், பைனான்சியர் அருண் பாண்டியன். இவரது மகள் கீர்த்தி பாண்டியன். இவர் தும்பா என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகிறார்.

இந்த படத்தின் விழாவில் கீர்த்தி பாண்டியன் பேசும் போது ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு ஒரு கட்டத்தில் அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழ அரங்கம் நிசப்தமானது.

வழக்கமாக நடிப்புக்காக மேடையில் அழுகிற பிரபலங்களுக்கு மத்தியில் ஒரு பிரபலத்தின் வாரீசாக இருந்தும் தான் அவமதிப்பு செய்யப்பட்டதை பகிரங்கமாக சொல்லி உணர்ச்சிகளை கீர்த்தி பாண்டியன் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அவர் பேசும் போது “”எனக்கு வாய்ப்புத் தருவதற்காக பலர் வந்தனர்.பேசினார்கள்.நானும் பலரிடம் வாய்ப்புக் கேட்டுச்சென்றேன்.

ஆனால் அவர்களில் பலர் என் தோற்றத்தைக் கண்டு இந்த உருவத்தை எல்லாம் எவன் பார்ப்பான்..யாரும் தியேட்டருக்கு வரமாட்டார்கள் என்று இழிவாக பேசினார்கள். ஆனால் இந்த பட இயக்குனர் தான் என் உருவத்தை விட திறமைக்கு மதிப்பு கொடுத்தார்.
அதனால் அவருக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன்”” என்றார் கீர்த்தி பாண்டியன்.

1,698 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன