
எம்.பி. வெற்றி பெற்றது ஒருவர் அவருக்கு அவரே தலைவர் – இது அதிமுக கலாட்டா அறிக்கை
பாராளுமன்றத்தில் ஒவ்வொரு கட்சியும் மக்களவையில் வெற்றி பெற்ற எம்பிக்களில் ஒருவரை அந்த கட்சியின் மக்களவை தலைவராக தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் திமுக மக்களவை எம்பிக்களின் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து ஒரே ஒரு எம்பியாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகன் ரவீந்த்ரநாத் குமார் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு அவரே தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கடிதம் ஒன்றை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கடிதம் ஒன்றை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த கடிதத்தை குறிப்பிட்டு இணையத்தில் மீம்ஸ் பறக்கிறது.
“ஒரே ஒரு எம்பி வருகிறார் வழி விடுங்கோ” ஒரே ஒருத்தர் போட்டியின்றி தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும் நெட்டிசன்கள் கிண்டல் பதிவுகள் இணையத்தில் களை கட்டுகிறது.
