வெள்ளிக்கிழமை, நவம்பர் 6
Shadow

ராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..!

 

ராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..!

நடிகர் சூர்யா ‘என்ஜிகே ‘ படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துவருகிறார்.

சமீபத்தில் வெளிவந்த காப்பான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் , நடிகை சாய்ஷா மற்றும் அவரது கணவர் ஆர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதில் மோகன்லால் பிரதமர் நரேந்திர மோடி வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் தெலுங்கு அறிவிப்பை பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி நாளை ஜூன் 27ம் தேதி காலை 10.30 மணிக்கு அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன