புதன்கிழமை, மே 8
Shadow

ராஜமௌலி வெளியிட்ட காப்பான் சூர்யாவின் பந்தோபஸ்த்..!

 

ராஜமௌலி வெளியிட்ட காப்பான் சூர்யாவின் பந்தோபஸ்த்..!

சூர்யா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் காப்பான் படத்தின் தெலுங்கு போஸ்டர் மற்றும் தலைப்பை இயக்குனர் ராஜமௌலி டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

லைகா தயாரிப்பில் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காப்பான்’.

அயன் மற்றும் மாற்றான் படங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் மாதம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகவுள்ள நிலையில் காப்பான் படத்தின் தெலுங்கு தலைப்பு மற்றும் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

தெலுங்கு பதிப்புக்கு பந்தோபஸ்த் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பை இயக்குனர் ராஜமௌலி டிவிட்டரில் வெளியிட்டார்.

ஏற்கனவே நீண்ட நாட்கள் கழித்து வந்த என்ஜிகே சூர்யா ரசிகர்களை ரொம்பவே ஏமாற்றியது. எப்படியும் காப்பான் வந்து காப்பாற்றுவார் என்று ரசிகர்கள் தங்களை தாங்களே தேற்றிக் கொண்டனர். அவர்களை பாதுகாப்பது போல தெலுங்கில் பந்தோபஸ்த் ஆக மாறியிருக்கிறார்.

625 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன