வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

இயக்குனர் சங்க தேர்தல் குளறுபடிக்கு ஆர்.கே.செல்வமணி காரணமா…!

 

இயக்குனர் சங்க தேர்தல் குளறுபடிக்கு ஆர்.கே.செல்வமணி காரணமா…!

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டது. முன்னதாக தலைவர் பதவிக்கு இயக்குனர் பாரதிராஜா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிகழ்வில் பெப்சியின் தலைவர் செல்வமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தலைவர் பதவியை பாரதிராஜா திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து இயக்குனர் சங்கத்தில் கடும் குழப்பம் நிலவியது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இயக்குனர் சங்க பொதுக்குழுவில் கடும் அமளி ஏற்பட்டது. இயக்குனர் சங்க பெயரை இழந்தது தொடங்கி இப்போது ஏற்பட்ட எல்லா குளறுபடிகளுக்கும் ஆர்.கே.செல்வமணி தான் காரணம் என்று பெரும்பாலான இயக்குனர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் மீண்டும் இயக்குனர் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டதால் எஸ்.பி.ஜனநாதன், அமீர் தலைமையில் ஒரு அணியும், செல்வமணி தலைமையில் ஒரு அணியும் களத்தில் இறங்கினார்.
தலைவர் பதவிக்கு ஜனநாதன், கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு உட்பட சிலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்த சூழலில் ஜனநாதன், அமீர் வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார்.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது ஆதரவு இயக்குனர்கள் தேர்தல் அதிகாரி ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறார் என குற்றம் சாட்டினர்.
இந்த சூழலில் நேற்று இரவு திடீரென 15 இயக்குனர்கள் போட்டியில் இருந்து விலகி விட்டனர்.
தேர்தல் முறையாக நடக்காது என்பதால் இந்த விலகல் முடிவை எடுத்ததாக அறிக்கை வெளியிட்டதால் திரையுலகில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.

 

இயக்குனர் பாரதிராஜா தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்க செய்திருந்த முடிவை மாற்றி இயக்குனர் சங்கத் தலைவர் பதவிக்கு அழைத்து வந்து நிறுத்தியது செல்வமணி தான்.

461 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன