நடமாடும் டாஸ்மாக் கடை கேட்ட எம்.எல்.ஏ. “தண்ணி”யரசுவின் பதவியை பறித்தாலும் தவறில்லை..!

134 Views

 

நடமாடும் டாஸ்மாக் கடை கேட்ட எம்.எல்.ஏ. “தண்ணி” யரசுவின் பதவியை பறித்தாலும் தவறில்லை..!

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. அதை குறித்து பேசுவதற்கு பதில் குடியை கொடுக்கும் குடிக்கு ஆதரவான கருத்தை சட்டசபை கூட்டத்தில் கோரிக்கையாக வைத்த மக்கள் விரோத எம்.எல்.ஏ. தண்ணியரசு…

சட்டப்பேரவையில் வேளாண்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு, ”மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டில் வாங்குவது மிக கஷ்டமாக இருப்பதாகவும், அந்த காலத்தில் புதுப்படங்களுக்கு டிக்கெட் பெறுவது போல ஒரு பாட்டில் வாங்குவதற்கு அதிக நேரமாவதாகவும், எனவே தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் அமைக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்.

தனியரசு எம்.எல்.ஏவின் இந்த கோரிக்கையால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தாலும் இதுகுறித்த செய்தியால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும், படிப்படியாக மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் ஒரு எம்.எல்.ஏ சட்டப்பேரவையில் நடமாடும் டாஸ்மாக் வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர் தனியரசுவா இல்லை “தண்ணி”அரசுவா என நெட்டிசன்கள் வறுத்தெடுக்கிறார்கள். தமிழ்நாடு முழுதும் குடி தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கும் போது அது குறித்து எந்த கருத்தையும் பதிவு செய்யாமல் குடியை கொடுக்கும் குடிக்கு நடமாடும் கடை கேட்ட இது போன்ற கேவலமான எம்.எல்.ஏ. பதவியைகூட பறிக்கும் வகையில் சட்ட திருத்தங்கள் வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *