வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

பாலிவுட் படத்தில் அமீர்கானுக்கு வில்லன் விஜய் சேதுபதியா..?

 

அமீர்கானுக்கு வில்லன் விஜய் சேதுபதியா..?

நடிகர் விஜய் சேதுபதி மக்கள் விரும்பும் கதாநாயகனாக பல படங்களில் நடித்து வந்தாலும், கதாபாத்திரம் பிடித்து போனால் அது கொஞ்ச நேரமே வந்தாலும், அல்லது நெகட்டிவ் விமர்சனங்கள் வரும் என தெரிந்தாலும் அந்த ரோலில் நடிப்பார்.

அப்படி பல படங்கள் அவர் நடிப்பில் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை கூட வாங்கியிருக்கிறது.

விஜய் சேதுபதி அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து அவருக்கு பிடித்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஹாலிவுட் படத்தில் டப்பிங் குரல் கொடுத்த விவகாரத்தில் டப்பிங் யூனியன் செயலாளர் கதிரவன் பாலு சமூக வலைதள பக்கத்தில் விஜய் சேதுபதி பின்னணி குரல் “டீக்கடை பொறுக்கி” வாய்சுக்குதான் லாயக்கு படும் என குறிப்பிட்டு வம்புக்கு இழுத்த போதும் அதை விஜய் சேதுபதி கண்டு கொள்ளாமல் கதிரவன் பாலுவை ஒரு பொருட்டாகவே எடுக்காமல் தனது ரசிகர்களுக்கும் இதை பெரிது படுத்தாமல் விடச் சொல்லி விட்டார் சேதுபதி.

இந்த நிலையில் விஜய் சேதுபதி திடீரென அமீர்கான் அழைப்பின் பேரில் மும்பை சென்று அமீர்கானை சந்தித்தார்.

இந்த சந்திப்பு நடப்பதற்கு காரணமே விஜய் சேதுபதி கதாபாத்திர காதலே என சொல்லலாம். அமீர்கான் நடிக்கும் இந்தி படமொன்றில் அமீர்கானுக்கு வில்லன் ஒரு ஹீரோவாக இருந்தால் சரியாக இருக்கும் என யோசித்து இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக தென்னிந்திய ஹீரோ என்றால் படத்துக்கும் வியாபாரத்துக்கும் சரியாக இருக்கும் என யோசித்து அதன் பின் தான் விஜய் சேதுபதி சந்திப்பு நடந்திருக்கிறது.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய் படங்களில் இந்தி ஹீரோக்கள் வில்லன் வேஷத்தில் நடித்திருக்கிறார்கள்.

அதே போல இப்போது அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி வில்லன் வேஷம் கட்டப்போகிறார். இந்தியில் விஜய் சேதுபதி கால் பதிக்கும் இந்த படம் மூலமாக ஒட்டுமொத்த சினிமா உலகில் வித்தியாசமான வில்லத்தனம் செய்யப்போகிறார் விஜய் சேதுபதி.

அமீர்கானுடன் விஜய் சேதுபதி சந்திப்பு விவரத்தை ஏனோ ரகசியமாக வைத்திருக்கிறார்கள். அப்படி ரகசியமாக வைத்திருந்தாலும் அமீர்கானுடன் விஜய் சேதுபதி மேனேஜர் படம் எடுத்து கொண்டு அந்த படத்தை இணையத்தில் பதிவிட்டு இவர்கள் சந்திப்பை உறுதிபடுத்தி இருக்கிறார்.

பல கெட்டப்ப போட்டாலும் மண்ட மேல இருக்கும் கொண்டைய மறைக்காம விட்டுடியே கோவாலு..!

507 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன