வியாழக்கிழமை, நவம்பர் 5
Shadow

கமலுக்கு கடிதம் எழுதிய சூர்யா..!

 

கமலுக்கு கடிதம் எழுதிய சூர்யா..!

தனது கல்வி கொள்கை கண்டனப் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பு நேரத்தில் ஆதரித்து குரல் கொடுத்த உலக நாயகன் கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது:

கமல்ஹாசன் அவர்களுக்கு வணக்கம். கல்விக் கொள்கை தொடர்பான என் கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும் எனக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய தங்களுக்கும், தங்களின் மக்கள் நீதி மையம் அமைப்பிற்கும் என்னுடைய நன்றிகள்.

திரை உலகில் என் போன்ற பல கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு கல்விப் பணியில் தொடர்ந்து தீர்க்கமாக செயலாற்ற ஊக்கமளிக்கிறது. தங்களின் தார்மீக ஆதரவிற்கு மீண்டும் என் நன்றிகள் என்று சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன