வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

சூர்யா கருத்தை வரவேற்று மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக சாட்டை சுழற்றும் ரஜினி..!

 

புதிய கல்வி கொள்கை விவகாரம் சூர்யா கருத்தை வரவேற்று மத்திய அரசை மறைமுகமாக எதிர்த்த ரஜினி..!

நடிகர் சூர்யாவின் காப்பான் படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் இன்று நடந்தது.

விழாவில் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டு ரஜினிகாந்த் பேசியது: தம்பி சூர்யாவின் இன்னொரு முகம் சில தினங்களுக்கு முன்பு தான் எனக்கு தெரிந்தது.
புதிய கல்வி கொள்கை விஷயத்தில் சூர்யா பேசிய கருத்து சரிதான். அவருடைய பேச்சுக்கு என் ஆதரவு உண்டு. அவர் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.

மாணவர்கள் படும் கஷ்டத்தை அருகில் இருந்து பார்த்தவர் சூர்யா.

அதே போல இன்றைய இளைஞர்கள் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழாற்றுபடை படித்த பின் வைரமுத்து மீதான மதிப்பு இன்னமும் பல மடங்கு உயர்ந்தது.

கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 நிச்சயம் வெற்றி பெறும்.

என் கலைப்பயணத்தில் தர்பார் போல இனி ஒரு படம் எடுக்க முடியாது என சொல்லும் அளவுக்கு இயக்குநர் முருகதாஸ் சிறப்பாக எடுத்து வருகிறார் என ரஜினி பேசியிருக்கிறார்.

சமீபத்தில் அகரம் விழாவில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசிய கருத்து பெரும ப்ரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு கடும் விமர்சனங்களை சூர்யா எதிர் கொண்டார்.

நடிகர் கமல், சீமான், திருமாவளவன் உட்பட பலரும் சூர்யா கருத்தை வரவேற்றனர்.

ரஜினிகாந்த் எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தார். இந்த நிலையில் காப்பான் பட விழாவில் சூர்யா கருத்தை ரஜினி வரவேற்று பேசியதால் மத்திய அரசோடு ரஜினி மோதல் போக்கை தொடங்கி விட்டாரா என்ற பரபரப்பு ஏற்பட்டது.
காரணம் இன்றைய இளைஞர்கள் தமிழ் மொழியின் சிறப்பை தெரிந்து கொள்ள வேண்டும் என பேசியதும் மத்திய அரசின் மும்மொழி கொள்கையை எதிர்க்கவே என்றும் விவாதங்கள் தொடங்கிவிட்டது.

எது எப்படியோ காப்பான் விழாவில் ரஜினியின் பேச்சு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும்.

648 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன